உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சங்க உறுப்பினர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்

 சங்க உறுப்பினர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பகவதிபாளையத்தில் பால் கொள்முதல் சங்க உறுப்பினர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். கிணத்துக்கடவு பகவதிபாளையத்தில் உள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையத்தின் பால் கொள்முதல் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். மேலும், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், பால் உற்பத்தியாளர்களின் கன்றுகள் அணிவகுப்பு நடந்தது. இதை அமைச்சர் பார்வையிட்டார். சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்