அமைச்சு பணியாளர்கள் விளையாட்டில் அசத்தல்
கோவை; கோவை மாநகர போலீஸ் பிரிவு துவங்கப்பட்டு, 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை பவள விழாவாக போலீசார் கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு போலீசாருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அமைச்சு பணியாளர்களுக்கு செஸ், கேரம், 'பால் பாசிங்' உள்ளிட்ட போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் பரிசு வழங்கினார்.