உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுபான்மையினர் ஆணைய குழு 13ல் கோவை வருகை

சிறுபான்மையினர் ஆணைய குழு 13ல் கோவை வருகை

கோவை: தமிழக சிறுபான்மையினர் ஆணைய குழு, 13ம் தேதி (புதன்கிழமை) கோவை வருகிறது.அன்றைய தினம், தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமையிலான ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள், 13ம் தேதி காலை, 10:30 மணிக்கு, சந்திக்கின்றனர். சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்கள் கேட்டறியவும் இருக்கின்றனர்.சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையின மக்கள் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, ஆணைய குழுவினரிடம் கருத்துக்கள் கூறலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை