பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம்
சூலுார், ;காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத், கோவில் பூஜாரிகள் பேரவை, சக்தி சேனா அமைப்புகள் சார்பில், பட்டணம், நடுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார் தலைமையில் கணேஷ், ரங்கசாமி, கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்று, மோட்ச தீபம் ஏற்றி, புஷ்பாஞ்சலி செலுத்தினர். ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று மவுன அஞ்சலி செலுத்தினர்.