உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெட்டிக்கடையில் பணம் திருட்டு

பெட்டிக்கடையில் பணம் திருட்டு

கோவை; அவிநாசி சாலை, பழைய மேம்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 53; அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 25ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கல்லாவில் இருந்த ரூ. 20 ஆயிரம் திருட்டு போயிருந்தது. அவர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை