உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடுப்பணையில் சிக்கிய குரங்கு; போராடி மீட்ட வனத்துறை

தடுப்பணையில் சிக்கிய குரங்கு; போராடி மீட்ட வனத்துறை

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே புதுப்பாளையத்தில் தடுப்பணை உள்ளது. நேற்று முன்தினம் காலை இப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று, அதே பகுதியில் சுற்றித்திரிந்த இன்னொரு குரங்கை துரத்தியது. தடுப்பணையின் ஆகாய தாமரை மீது வேகமாக தாவிய குரங்கு, நடுவே இருந்த காய்ந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்தது. மரத்தின் மீது அமர்ந்த குரங்கால் கீழே இறங்க முடியவில்லை. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் பிளாஸ்டிக் குழாயை எடுத்து, அதை குரங்குக்கு அருகே மிதக்க செய்து, அதில் குரங்கு ஏறி வர திட்டமிடப்பட்டது. தடுப்பணையின் சுவர் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் குழாயை மிதக்க விட்டு மரத்தில் இருந்த குரங்கு பத்திரமாக மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை