உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குரங்குகள் அட்டகாசம் ஆசிரியர் நகர் மக்கள் அச்சம்

 குரங்குகள் அட்டகாசம் ஆசிரியர் நகர் மக்கள் அச்சம்

சூலுார்: சின்னியம்பாளையம், ஆசிரியர் நகர் பகுதியில், குரங்குகள் அட்டகாசம் செய்வதால்,மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சூலுார் அடுத்த சின்னியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஆசிரியர் நகர். இங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த, 10 நாட்களாக மூன்று குரங்குகள் சுற்றி திரிகின்றன. வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை நாசம் செய்கின்றன. ரோட்டில் செல்வோர் மீது பாய்ந்து கடிக்க முற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''கடந்த சில மாதங்களுக்கு முன், ஒற்றை குரங்கு எங்கள் பகுதியில் சுற்றி அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. வனத்துறைக்கு பலமுறை தகவல் அளித்தபின், நீண்ட போராட்டத்துக்கு பின், அந்த குரங்கு பிடிக்கப்பட்டதால் நிம்மதியாக இருந்தோம். தற்போது, புதிதாக மூன்று குரங்குகள் வந்துள்ளன. வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை உண்டு சேதப் படுத்துகிறது. மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி விடுகிறது. ரோட்டில் செல்வோரை கடிக்க முற்படுகிறது. இதனால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறைக்கு தகவல் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. விரைந்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ