பருவமழை முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கோவை: கோவை மாநகரில் மழை காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும், அவிநாசி ரோடு மேம்பாலம், திருச்சி ரோடு, பெர்க்ஸ் பள் ளி நுழைவாயில் அருகே சங்கனுார் கால்வாய் உள்ளிட்ட இடங்களில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குனருமான ராகுல் நாத் நேற்று ஆய்வு செய்தார். பாதிப்புகளை கட்டுப்படுத்த, மின் மோட்டார்களை கூடுதலாக பொருத்துதல், நீர் வழித்தடங்களை துார்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.