உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருவமழை முன்னெச்சரிக்கை; மக்களுக்கு விழிப்புணர்வு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம்

பருவமழை முன்னெச்சரிக்கை; மக்களுக்கு விழிப்புணர்வு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம்

கிணத்துக்கடவு, தாலுகா அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பருவமழை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், தளவாடங்கள் உபயோகிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.மேலும், ஆபத்து காலங்களில் எப்படி பாதுகாப்பது, கிணற்றில் விழுந்தால் தன்னை தானே பாதுகாப்பது, பாம்புகளிடம் இருந்து தப்பிப்பது மற்றும் பாம்புகளை எப்படி கையாள்வது, மழை காலத்தில் சேறு நிறைந்த பகுதியை கண்டுபிடிக்கும் முறைகள், ஆபத்து காலத்தில் தீயணைப்பு வீரர்கள் எவ்வாறு பிறரை காப்பாற்றுவார்கள் என்பது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

வால்பாறை

வால்பாறையில், மழை காலத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவது எப்படி என்பது குறித்து, தீயணைப்புத்துறை சார்பில் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் நடந்த செயல்விளக்க நிகழ்ச்சிக்கு, தாசில்தார்(பொ) மோகன்பாபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியை நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் விநாயகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறைசிறப்பு நிலைய அலுவலர் பிரகாஷ்குமார், மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பது குறித்து, சுற்றுலா பயணியர் மத்தியில் விளக்கினார்.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை வீரர்களும் இணைந்து, மழை வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்பட்டால், அவரை பத்திரமாக மீட்பது எப்படி, ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும், விபத்தின் போது முதலுதவி செய்வது குறித்தும் செயல்விளக்கம் காண்பித்தனர்.வால்பாறை தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: மழை காலத்தில், ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.சுற்றுலா பயணியர் ஆற்றில் ஆழம் தெரியாமலும், நீச்சல் தெரியாமலும் குளிக்க வேண்டாம். மழை வெள்ளத்தில் அடித்துச்செல்பவர்களை மீட்க எந்த நேரத்திலும், தீயணைப்பு துறையினரை அழைக்கலாம்.இடி, மின்னலின் போது, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், மழை காலங்களில் குழந்தைகளை எச்சரிக்கையாக பாதுகாத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு, தெரிவித்தனர். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ