மேலும் செய்திகள்
காளான், தேனீ வளர்க்க வேளாண் பல்கலையில் பயிற்சி
03-Nov-2024
கோவை: கோவை, வேளாண் பல்கலையின், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இரண்டு நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.வரும், 12 மற்றும் 13ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். மேலும், தொழில் துவங்குவதற்கான உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளும் கற்பிக்கப்படும்.பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், பயிற்சியின் முதல்நாளில், வரிகள் உட்பட ரூ. 1770 கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய தலைவரை, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
03-Nov-2024