| ADDED : நவ 26, 2025 05:42 AM
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், ஓட்டுச்சாவடிகளில் மாலை, 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,' என நகராட்சி கமிஷனர் தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இப்பணிகளை நகராட்சி கமிஷனர் குமரன் ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வீடு தோறும் விண்ணப்ப படிவம் வழங் கப்பட்டு படிவம் பூர்த்தி செய்து திரும்ப பெறும் பணி நடக்கிறது. பொதுமக்கள் அனைவரும் படிவத்தை பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்கள் குறித்து நான்கு வாகனங்கள், இரண்டு ஆட்டோக்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நகரில் உள்ள, 21 ஓட்டுச்சாவடிகள் மற்றும், ஆறு இடங்களில் பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓட்டுச்சாவடிகளில் தினந்தோறும் மாலை, 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.