உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடைவீதிகளில் திருட்டை தடுக்க மாநகர போலீசார் கண்காணிப்பு

கடைவீதிகளில் திருட்டை தடுக்க மாநகர போலீசார் கண்காணிப்பு

கோவை, : கடைவீதிகளில் மக்களிடம் திருட்டை தடுக்க, மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மாநகரில், 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், சாதாரண உடைகளிலும் தனிப்படை போலீசார், ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கோபுரம் அமைத்து, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. தீபாவளி திருடர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களையும் கண்காணிக்கின்றனர்.பொதுமக்களின் கூட்டத்தை சீர்படுத்துவதற்காக, போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர். திருட்டு சம்பவங்களை தடுக்க, பூட்டப்பட்ட வீடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ