உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என் மண் என் மக்கள் யாத்திரை இன்று பா.ஜ., பொதுக்கூட்டம்

என் மண் என் மக்கள் யாத்திரை இன்று பா.ஜ., பொதுக்கூட்டம்

கோவை: கோவையில், 'என் மண் என் மக்கள் யாத்திரை', பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் கோவையில் இரண்டாவது முறையாக, இன்று மாலை நடக்கிறது. இரவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.கோவை, பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி கடை மைதானத்திலிருந்து, மாலை 4:30 மணிக்கு 'என் மண் என் மக்கள் யாத்திரை' துவங்குகிறது.திங்களூர் மாரியம்மன் கோவில், பழையூர், ஜெய்பீம்நகர், நியூசிற்றம்பலம் லேஅவுட், கருப்பாத்தாள் லேஅவுட், நவஇந்தியா, ராமகிருஷ்ணா மருத்துவமனை, வெங்கடாஜலபுரம், வி.கே.கே.மேனன் சாலை ஜெயா பேக்கரி முன், மாலை 6:30 மணிக்கு யாத்திரை நிறைவு பெறுகிறது. மாலை 6:45 மணிக்கு, பா.ஜ.,பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன், மாநில பொது செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை