மேலும் செய்திகள்
வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி: விவசாயி கண்ணீர்
26-Mar-2025
அன்னுார்; இரண்டாவது நாளாக மர்ம விலங்கு, கோழியை தூக்கிச் சென்றதால், கால்நடை வளர்ப்போர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில், ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆட்டுப்பண்ணை உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் மர்ம விலங்கு தாக்கியதில் 18 ஆடுகள் இறந்தன. மேலும் இரண்டு ஆடுகளை காணவில்லை.இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். ஆட்டுப்பண்ணை கொட்டகைக்கு உள்ளே இரண்டு இடங்களிலும் வெளிப்புறம் ஒரு இடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.நேற்று முன் தினம் இரவு ஆட்டுக் கொட்டகைக்குள் ஒரு கோழியை வைத்து விட்டு சென்றனர். நேற்று காலை சென்று பார்த்த போது அந்த கோழியை மர்ம விலங்கு எடுத்துச் சென்று விட்டது. ரத்தம் சிதறி இருந்தது. கோழி இறக்கைகள் மட்டும் கிடந்தன.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பரிசோதித்தனர். எனினும் அதில் காட்சிகள் சரியாக பதிவாகவில்லை.இதையடுத்து கூடுதல் வெளிச்சம் ஏற்படுத்தி, நேற்று இரவு மறுபடியும் ஒரு கோழியை ஆட்டுக் கொட்டகைக்குள் வைத்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி கால்நடை வளர்ப்போர் கூறுகையில், 'முதல் நாள் 20 ஆடுகள் பலியாகி உள்ளன. இரண்டாவது நாள் ஒரு கோழி பலியாகி உள்ளது. எனவே வனத்துறையினர் இப்பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும். கால்நடைகள் வைத்திருக்கும் அனைவரும் அச்சத்தில் உள்ளோம்,' என்றனர்.
26-Mar-2025