உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

கோவை: சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம், 68; தனியார் நிறுவன சூப்பர்வைசர். இவரது தாயார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் சதாசிவம் மனம் உடைந்த நிலையில் இருந்தார். மனைவி ராஜாமணி, 62 சமாதானம் செய்தார். இரு நாட்களுக்கு முன் இரவு, பணிபுரியும் நிறுவனத்துக்கு செல்வதாக கூறிச்சென்றார். மறுநாள் காலை நிறுவன ஊழியர் ஒருவர், சதாசிவம் துாக்கிட்ட நிலையில் இருப்பதாக, ராஜாமணியிடம் தெரிவித்தார். அங்கு சென்ற மனைவி, சதாசிவத்தை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த மர்ம மரணம் பற்றி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை