உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாத்திரையில் பெயர்; நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

மாத்திரையில் பெயர்; நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

கோவை : மாத்திரையில், அதன் பெயரை அச்சிட கோரி, மத்திய, மாநில அரசை, நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் என்ற நுகர்வோர் அமைப்பு சார்பில் அதன் தலைவர் சி.எம்.ஜெயராமன், மத்திய மற்றும் மாநில சுகாதார துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, மருந்துகளை அடையாளம் காணும் வகையில், ஒவ்வொரு மாத்திரையிலும் அதன் பெயரை அச்சிட வேண்டும். மாத்திரையின் அளவு கட்டுப்பாடு காரணமாக சாத்தியமில்லை எனில், மாத்திரையின் ஆரம்ப எழுத்து தெளிவாக தெரியும் வகையில் அச்சிட வேண்டும். மருந்து பேக்கேஜ் உட்புறத்தில் மாத்திரையின் பெயர் அச்சிடப்பட வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் மாத்திரைகள் பிளாக் மார்க்கெட்டில் விற்கப்படுவதை தடுக்க அரசு முத்திரை பதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை