உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பள்ளிகளில் டைப் 1 சர்க்கரை பாதிப்பு அறிய தேசிய சுகாதார இயக்குனரகம் அறிவுறுத்தல்

 பள்ளிகளில் டைப் 1 சர்க்கரை பாதிப்பு அறிய தேசிய சுகாதார இயக்குனரகம் அறிவுறுத்தல்

கோவை: தேசிய சுகாதார இயக்குனரம் மற்றும் கோவை இதயம் அறக்கட்டளை சார்பில், டைப்1 சர்க்கரை பாதிப்புள்ள குழந்தைகளின் பதிவேடுகள், கடந்த சில மாதங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும், 5,000 குழந்தைகளின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் விபரங்களும் பெற, தேசிய சுகாதார இயக்குனகரம் செயல்பாடுகளை துவக்கியுள்ளது. இதயங்கள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது: தேசிய சுகாதார இயக்ககம் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, சென்னை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய ஏழு அரசு மருத்துவமனைகளில் டைப் 1பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, பிரத்யேக மையம் துவக்கப்பட்டுள்ளது. இம்மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு, அனைத்து சிகிச்சைகளும் இலவசம். தற்போது, இப்பிரத்யேக மையம் தேனி, சிதம்பரம் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் துவக்கப்பட்டுள்ளன. மேலும் 13 அரசு மருத்துவமனையில், பிரத்யேக மையம் துவக்க, தேசிய சுகாதார இயக்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. டைப் 1 குழந்தைகளின் விவரங்கள், தொகுத்து பராமரிக்கப்படுகிறது. இதுவரை, 5,000 குழந்தைகளை பதிவு செய்துள்ளோம். அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் விவரங்களையும் பெற, தேசிய கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்களை அனுப்பிஉள்ளது. பள்ளி மருத்துவ கண்காணிப்பு குழுவான ஆர்.பி.எஸ்.கே., திட்டத்தின் கீழ், பள்ளிகளில் கண்காணித்து விவரங்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அறிந்த பின், தேசிய சுகாதார இயக்ககத்தால் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை