உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேந்திரிய பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு விழா

கேந்திரிய பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு விழா

சூலுார்; ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை அடிப்படையாக கொண்டு, கேந்திரிய பள்ளிகளுக்கு இடையில்,' ராஷ்ட்ரிய ஏக்தா பர்வ்' எனும் தேசிய ஒருமைப்பாட்டு விழா, கலை, கலாசார போட்டிகளுடன் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. சூலுார் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா வில், தேசிய ஒருமைப்பாட்டு விழா நேற்று முன் தினம் நடந்தது. விழாவை, பள்ளி முதல்வர் ராகேஷ் குமார் மிஷ்ரா துவக்கி வைத்தார்.சென்னை மண்டலத்தை சேர்ந்த ஏழு கேந்திரிய பள்ளிகளை சேர்ந்த, 234 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் குழு நடனம், குழு பாடல், நாடகம் உள்ளிட்ட கலை, கலாசார போட்டிகள் நடந்தன. மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் கரகோஷங்களை பெற்றனர். சிறப்பு விருந்தினர்கள் சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை