உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய ரோபோடிக்ஸ் கண்காட்சி சிறப்பு

தேசிய ரோபோடிக்ஸ் கண்காட்சி சிறப்பு

கோவை:துடியலுார், வட்டமலைபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் பயன்பாடுகள் பற்றிய கண்காட்சி மற்றும் போட்டி நடந்தது.இந்தியாவின் விப்ரோ பாரி நிறுவனம், சிறந்த திறமையாளர்களை அங்கீகரிப்பதற்காக, இந்நிகழ்வுக்கு ரூ. 2.5 லட்சம் ஸ்பான்சர்சிப் வழங்கியது.அந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை தலைவர் அனில் தேசிங்கே, மனிதவள மேம்பாட்டுதுறை தலைவர் சைதன்ய சிந்தே ஆகியோர், கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.ரோபோ எக்ஸ்போ, ரோபோ ரேஸ், ரோபோ சாக்கர், ட்ரோன் ரேஸ் மற்றும் வினாடி வினா என பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த படைப்புகளுக்கு, சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் அலமேலு, துணை முதல்வர் கருப்புசாமி, ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறை தலைவர் முருகராஜன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ