உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லுாரியில் செவிலியர்க்கு தேசிய கருத்தரங்கம்

ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லுாரியில் செவிலியர்க்கு தேசிய கருத்தரங்கம்

கோவை; ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லுாரியில், மனநல செவிலியர் துறை சார்பில், தேசிய மனநல செவிலியர்களுக்கனா செயல்முறை கருத்தரங்கம் நடந்தது. ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பெரியசாமி, கருத்தரங்கை துவக்கி வைத்தார்.இதில், புதுமையான கற்பித்தல் முறையில், நாடக வடிவில் மனநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.பேராசிரியர் மீரா, ராஜலட்சுமி, மனநல மருத்துவர் ஜெயன், கர்நாடகாவிலிருந்து டாக்டர் சர்மிளா, கேரளாவிலிருந்து டாக்டர் கவிதா ஆகியோர் சிகிச்சை முறைகள் குறித்து கற்பித்தனர்.நாடு முழுவதிலிருந்தும் 21 கல்லுாரிகளைச் சேர்ந்த, 550 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். அபிராமி மருத்தவமனையின் டாக்டர்கள் குந்தவிதேவி, செந்தில்குமார், பாலமுருகன், உமாதேவி, சுச்சரிதா, ஜெயபாரதி மற்றும் கல்லுாரி முதல்வர் ரேணுகா, மனநல துறை தலைவர் டாக்டர் அர்வின் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை