மேலும் செய்திகள்
'கொடுப்பதில் மகிழ்ச்சி' உலக சாதனை நிகழ்வு
04-Sep-2024
கோவை : அவினாசிலிங்கம் பல்கலையில், நாட்டு நலப்பணித் திட்ட(என்.எஸ்.எஸ்.,) விழா நடந்தது. மத்திய அரசின் இளைஞர் செயல்கள், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், தேசிய சேவைத்திட்டம் இணைந்து அவினாசிலிங்கம் பல்கலையில், என்.எஸ்.எஸ்., விழா நடந்தது. பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் தலைமை வகித்தார். தனிப்பட்ட வழக்கங்கள் மற்றும் சமூக விழுமியங்களில், துாய்மையை ஊக்குவிக்கும் பிரசாரம் வரும், 2ம் தேதி வரை நடக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில், துாய்மை இந்தியா ஸ்வச்தா கி சேவா என்ற தேசிய நோக்கத்தை அடைவதில் பங்களிக்கும் விதமாக, இந்நிகழ்வு நடத்தப்பட்டது.பழைய குறிப்பேடுகள், பத்திரிகைகள், நாளிதழ்கள் மற்றும் உலர் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு ஆகியவற்றை, மாணவர்களிடமிருந்து சேகரிப்பதே, நிகழ்வின் நோக்கம். இவற்றை சேகரித்து, 'வேஸ்ட் இன்டு ஒண்டர்ஸ்' கலை கண்காட்சி நடந்தது. இதில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். கண்காட்சியை, பல்கலையின் நாட்டுநலப்பணித் திட்ட மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா துவக்கி வைத்தார். மனையியல் துறை முதன்மையர் அம்சவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
04-Sep-2024