உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தக்காளி மகசூலை அதிகரிக்க இயற்கை சாகுபடி ஆலோசனை

 தக்காளி மகசூலை அதிகரிக்க இயற்கை சாகுபடி ஆலோசனை

கிணத்துக்கடவு: ரசாயன உரம் பயன்படுத்தாமல், தக்காளி மகசூலை அதிகரிக்க இயற்கை விவசாயி சம்பத்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார். கிணத்துக்கடவு வட்டாரத்தில், 450 ஹெக்டேர் பரப்பில் ஆண்டு தோறும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தக்காளி வரத்து கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தக்காளி சாகுபடியை அதிகரிக்க இயற்கை விவசாயி சம்பத்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், ஒரு வாரமான புளித்த மோர் (வெண்ணெய் எடுத்தது) ஒரு லிட்டரை, 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். மற்றும் ஒரு லிட்டர் தண்ணீரில், 3 எம்.எல்., மீன் அமிலத்தை கலந்து சொட்டுநீர் வாயிலாக தக்காளி பயிருக்கு அளிக்கலாம். இதில், மோர் கலவையை முதல் மூன்று நாட்களும், மீன் அமில கலவையை அடுத்த மூன்று நாட்களுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தக்காளியில் ஏற்படும் நோய்கள் குறையும். இது மட்டுமின்றி தக்காளி செடியில் பூ மற்றும் காய் உதிராது, காய்ப்பு அதிகரிக்கும். எனவே, விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை முறையில் சாகுபடி மேற்கொண்டு, மகசூலை அதிகரிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி