இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம்
கோவை; கோவையில், சிறுதுளி அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோவை வெஸ்ட் சார்பில், 17ம் ஆண்டு 'இயற்கை வளர்ப்பு முகாம்', கோவை வ.உ.சி., பூங்காவில் நடந்தது.சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில், ''17வது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இடம்பெறும்,'' என்றார்.கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், ரோட்டரி கிளப் ஆப் கோவை வெஸ்ட் தலைவர் ராஜேந்திரன் மற்றும் 20 பள்ளிகளிலிருந்து, 100 மாணவர்கள் பங்கேற்றனர்.