உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

நெகமம்; நெகமம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், அழகு சேர்வை செய்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நெகமம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 22ம் தேதி, கணபதி ஹோமம் மற்றும் அழகு சேர்வை செய்து சக்தி அழைத்து கொலு வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. 26ம் தேதி, திருவிளக்கு வழிபாட்டு பூஜைகள் நடந்தது. கடந்த, 1ம் தேதி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நடந்தது. நேற்று முன்தினம், காலையில் சக்தி அழைத்தல் மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து மாவிளக்கு பூஜை, ராகு தீப பூஜை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு அன்பு சேர்வை, அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று, 4ம் தேதி, காலை 9:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. * நெகமம், எம்மேகவுண்டன்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கத்தி போடும் நிகழ்வு நடந்தது. இதில், பக்தர்கள் தங்களின் கைகளில் கத்தி எந்தி கீரியபடி அம்மனை அழைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை