உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்

என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம்

கோவை; உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தேசிய மாணவர் படை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.தேசிய மாணவர் படை கோவை 6 டி.என்., மெட் சி.ஓ.ஓய்., என்.சி.சி., மற்றும் கோவை குரூப் சார்பில், கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.100 மாணவர்கள் ரத்தம் தானம் செய்தனர். காலை 9:00 மணிக்கு துவங்கிய ரத்ததான முகாம், மதியம் 12:00 வரை நடந்தது. துவக்க விழாவுக்கு, சுபேதார் மாரியப்பன், சுபேதார் வினோத்சிங், ஹவில்தார் சத்யம் சிங், ஹவில்தார் தீபக் ஆகியோர் தலைமைவகித்தனர். கோவையின் பல்வேறு பட்டாலியன் மற்றும் கம்பெனிகளை சேர்ந்த என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை