மேலும் செய்திகள்
நடையனேரி அரசு பள்ளியில் சேதமான கட்டடங்கள்
07-Dec-2024
கருமத்தம்பட்டி; வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனத்தின் நிதி உதவியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன.கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், இசட் எப் நிறுவனம், ரவுண்ட் டேபிள் 13, உமன் சர்க்கிள் அமைப்பு சார்பில், மூன்று வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.தனியார் நிறுவனம் மற்றும் அமைப்பு நிர்வாகிகள், மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிக்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர். தலைமையாசிரியர் செந்தில்குமார் பேசுகையில், ''புதிய வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட்டதன் மூலம் மாணவர்களின் கல்வி திறன் மேம்படும்,'' என்றார்.
07-Dec-2024