உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு அலுவலக உதவியாளர் சங்க புதிய மாவட்ட தலைவர் நியமனம்

அரசு அலுவலக உதவியாளர் சங்க புதிய மாவட்ட தலைவர் நியமனம்

சூலுார்: கோவை மாவட்ட அரசு அலுவலக உதவியாளர் சங்கத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்க தலைவர் மதுரம் அறிக்கை : கோவை மாவட்ட அரசு அலுவலக உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவரான, வெங்கடாசலத்தின் உடல் நலன் பாதிப்பு காரணமாக, சங்க பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையால் அவரது ஒப்புதலோடு, மாவட்ட துணைத்தலைவராக உள்ள சூலுார் கணேசன், கோவை மாவட்ட தலைவர் பொறுப்பினை கூடுதலாக ஏற்று சங்க பணிகளில் ஈடுபடுவார். அவருக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை