| ADDED : ஜூலை 05, 2024 02:50 AM
கோவை:டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம் சார்பில் கோவையில் 'டேனி சி.ஏ.ஜி., டெக் பார்க்' என்ற புதிய ஐ.டி., பார்க் அமைகிறது. கோவையில் அலுவலக இடத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 'டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம்', புதிய ஐ.டி., பார்க் நிறுவும் திட்டத்தை வெளியிட்டுள்ளது.இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சிவராமன் கந்தசாமி கூறுகையில், ''தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, ரியல் எஸ்டேட் துறையில் கடந்த ஐந்து வருடங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையில் அதீத வளர்ச்சியை கண்டுவருகிறது. எனவே, கோவை சரவணம்பட்டியில் 'டேனி சி.ஏ.ஜி., டெக் பார்க் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த வளாகம், 12 மாடிகளைக் கொண்ட இரு மெகா கட்டிடங்களில் சுமார் 3.5 லட்சம் சதுரடியில் நிறுவப்படவுள்ளது,'' என்றார்.