உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தினம் ரைஸ்ல் புதிய ஆய்வகம் திறப்பு

ரத்தினம் ரைஸ்ல் புதிய ஆய்வகம் திறப்பு

கோவை:ஈச்சனாரி, ரத்தினம் குழுமத்தின் அடல் இன்குபேசன் சென்டர் (ரைஸ்) புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தை, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் திறந்து வைத்தார்.இளம் தொழில் முனைவோர்கள், ஆய்வு மற்றும் அவர்களின் ஆய்வுகளை பரிசோதிக்க தேவையான ஐ.ஓ.டி., சாதனங்கள், முப்பரிமாண அச்சுப்பொறிகள் மற்றும் இதர சாதனங்கள் உள்ளடக்கிய ஆய்வுக்கூடமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.பிறவியிலேயே காது கேளாதோருக்கான கருவியை தயாரிக்கும் பேக்யார்ட் கிரியேடர்ஸ் நிறுவனர்களான ராமன் மற்றும் லட்சுமணன், சூரிய ஒளி மின் உற்பத்தித் தளங்களில் உள்ள உபகரணத்தை துாய்மைப்படுத்தும் ரோபோக்களை தயார் செய்யும் 'சொலேவியோ'வின் இணை நிறுவனர் பிரசாந்த், தங்கள் நிறுவனங்கள் குறித்து பேசினர். வட்டளோ ஸ்டார்ட்-அப் நிறுவனர் அமிர்தேஷ், 'செர்க்கிள் எக்ஸ்' நிறுவனர்கள் விஷ்ணு வரதன் மற்றும் திவ்யா ஷெட்டி, தங்கள் நிறுவனங்கள் குறித்து கலந்துரையாடினர். அடல் இன்குபேசன் சென்டர் தலைவர் மதன் செந்தில், துணைத் தலைவர் நாகராஜ் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ