மேலும் செய்திகள்
கிழக்கு மண்டலத்துக்கு புதிய உதவி கமிஷனர்
09-Oct-2025
கோவை: 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்க இருக்கிறது. இச்சூழலில், கோவை மாவட்டத்துக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை நகர்ப்புற நிலவரி உதவி கமிஷனராக பணியாற்றிய சிவசுப்ரமணியன், மாநில நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணிபுரிந்த ஜெகநாதன், நகர்ப்புற நிலவரி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை சிவா வடிப்பகத்தில் கலால் மேற்பார்வையாளராக பணிபுரிந்த சிவகுமாரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருப்பூர் மண்டல மேலாளராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணிபுரிந்த ரகுநாதன், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கோவை சிறப்பு படைக்கு துணை கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்பதவியில் இருந்த சந்திரசேகர், தாட்கோ மாவட்ட மேலாளராக மாற்றப்பட்டிருக்கிறார். திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) இருந்த மகாராஜ், கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியில் இருந்த துரை முருகன், திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
09-Oct-2025