கேலோ இந்தியா போட்டிகளால் புதிய வீரர்கள் உருவாகியுள்ளனர்: பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு
சூலுார்: ''கேலோ இந்தியா போட்டிகளால் புதிய விளையாட்டு வீரர்கள் உருவாகியுள்ளனர்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அன் ஸ்கூல் தசை இயக்க பயிற்சி பள்ளி மற்றும் அறக்கட்டளை சார்பில், சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பரிசளிக்கும் விழா, சூலுார் அடுத்த சிந்தாமணி புதூரில் நடந்தது. அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் குரு சித்தார்த், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n7gx2zvn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும், 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் போட்டியில் இந்தியாவும், கத்தாரும் உள்ளன. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. போட்டி நடத்த 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். நாம் போட்டியை நடத்துவதன் வாயிலாக, 'நாங்கள் வளர்ந்த முதன்மையான நாடுகளில் ஒன்று' என, உலகத்துக்கு தெரிவிக்க முடியும். இவ்வளவு செலவு செய்து நடத்தும் போட்டிகளில் பதக்கம் வெல்வது முக்கியம். அதற்கு, திறமையான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உருவாக வேண்டும். 20,000 பேர் தேசிய அளவில் தடகளத்தில் தேர்வு செய்யப்பட்டால் தான், அதில் ஒரு வீரரை தேர்வு செய்து, ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப முடியும். 40 லட்சம் பேர் பயிற்சி எடுத்தால் தான், 200 பேர் தேர்வாகி, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும்.ஒரு வீரர் பதக்கம் வெல்ல வேண்டும் என்றால், உடல் மற்றும் மனதுக்கான பயிற்சியாளர் வேண்டும். மத்திய அரசு நடத்தும் கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு, ஓராண்டுக்கு, 1 லட்சத்து, 20,000 ரூபாய் ஊக்கத்தொகையும், பயிற்சி எடுப்பதற்கு, ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை, தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 527 பேருக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.கேலோ இந்தியா போட்டிகளால், புதிய வீரர்கள் உருவாகியுள்ளனர். இந்தியா முழுதும் 152 பேர் தேர்வு செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களின் பயிற்சிக்கு பல கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், குழந்தைகளை விளையாட்டு வீரர்களாக உருவாக்க பெற்றோர் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உடற்கல்வி ஆசிரியர்கள்
தமிழகத்தில், ஊரக பகுதிகளில் உள்ள 66 சதவீத, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் மட்டுமே விளையாட்டு மைதானங்கள் உள்ளன. துவக்க பள்ளிகளில் 4 சதவீத உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நடுநிலைப்பள்ளிகளில், 15 சதவீதம் மட்டுமே உள்ளனர். கிராம புறங்களில் உள்ள வீரர்களை அடையாளம் காண உடற்கல்வி ஆசிரியர்கள் அவசியம். 2026ல் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், துவக்க பள்ளிகளில், 100 சதவீத உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்போம், என, அண்ணாமலை பேசினார்.