உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு

மேட்டுப்பாளையம் : பெள்ளாதி ஊராட்சியில் புதிதாக கட்டிய ரேஷன் கடை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.காரமடை ஊராட்சி ஒன்றியம் பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்டது தேரம்பாளையம். இந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தேரம்பாளையம், மொங்கம்பாளையம், பாச்சனூர், எம்.ஜி.ஆர்., காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த, 598 கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த கடை மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், ஊராட்சியின் சார்பில் 12.70 லட்சம் ரூபாய் செலவில், புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி சர்க்கரை ஆகியவற்றை வழங்கினார். இந்த விழாவில் காரமடை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மணிமேகலை, ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை