| ADDED : ஆக 21, 2026 04:42 PM
சூலுார்: ராவத்துார் தடுப்பணையில் புதிய ஷட்டர் அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. சூலுார் அடுத்த ராவத்துார் பகுதியில் நொய்யல் ஆற்றில் தடுப்பணை உள்ளது. இங்கு, சூலுார் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விட ஒரு ஷட்டர், ஆற்றுக்கு தண்ணீர் திருப்பும் வகையில் ஒரு ஷட்டர் உள்ளன. இதில், ஆற்றுக்கு தண்ணீர் திருப்பி விடும் ஷட்டர் பழுதடைந்ததால், அதை புதுப்பிக்கும் பணி சில நாட்களாக நடக்கிறது. மணல் மூட்டைகள் அடுக்கி, தண்ணீரை திருப்பி விட்டு, புதிய ஷட்டர் அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. நீர்வளத்துறையினர் கூறுகையில், ‘ஷட்டர் சீரமைக்கும் பணி நடப்பதால், குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்து ஷட்டர் செயல்பாட்டுக்கு வரும்’ என்றனர்.