உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொண்டைக்கடலை சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள்

கொண்டைக்கடலை சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள்

பெ.நா.பாளையம்; கோவை மாவட்டத்தில் சராசரியாக, 6,483 எக்டரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், கொண்டைக்கடலை மட்டும், 1053 எக்டர் ஆகும். கோவை மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு, 611 மி.மீ., மழை பொழிகிறது. கொண்டக் கடலை விதைப்புக்கு ஏற்ற பருவம் நவ., மாதம் ஆகும். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சர்க்கார் சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய வட்டாரங்களில் கொண்டக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், பயிறு வகை திட்டத்தின் கீழ் நுண்ணூட்டங்கள், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சர்க்கார் சாமகுளம் வட்டாரங்களில் தொகுப்பு செயல் விளக்க திடல்கள் அமைக்க மானியம் வழங்குகிறது. பயிறு நுண்ணூட்டங்கள், விதைப்பு செய்த மூன்று நாட்களுக்குள் மணலுடன் கலந்து மேலாக தூவ வேண்டும். பயிறு நுண்ணூட்டங்கள், உயிர் உரங்கள், ட்ரைகோ டெர்மா விரிடி ஆகிய இடுபொருள்கள், 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் வாயிலாக வழங்கப்படுகிறது. இதை அந்தந்த வட்டார விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர்களையோ அல்லது தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்ட ஆலோசகர்களையோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை