உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.1.20 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகம்

ரூ.1.20 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகம்

அன்னுார்; ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி வேகம் பெற்றுள்ளது.அன்னுார் பேரூராட்சி அலுவலகம் அன்னுாரில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் குமாரபாளையம் செல்லும் வழியில் அம்மணி அருணா நகரில் அமைந்துள்ளது. அன்னுார் நகரிலிருந்து, பேரூராட்சி அலுவலகம் தொலைவில் இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதையடுத்து அன்னுார் பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 'தற்போது தரைத்தள பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதையடுத்து முதல் தளத்தில் பணிகள் விரைவில் துவங்கும்,' என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.'கட்டடம் முழுமை பெற்று பேரூராட்சி அலுவலகம் இங்கு செயல்பட துவங்கினால் பொதுமக்கள் ஒன்றரை கி.மீ., தொலைவிற்கு செல்ல வேண்டிய சிரமம் இருக்காது,' என்பதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி