உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதுப்பெண் தற்கொலை வழக்கு: கணவன் - மாமியாருக்கு சிறை

புதுப்பெண் தற்கொலை வழக்கு: கணவன் - மாமியாருக்கு சிறை

கோவை; வரதட்சணை கொடுமையால், புதுப்பெண் தற்கொலை செய்த வழக்கில், கணவன் மற்றும் மாமியாருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, அன்னூர் அருகேயுள்ள ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குகன்,28; கல்லுாரி கேன்டீனில் பணியாற்றி வந்தார். இவருக்கும்,பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சசிகலா,19, என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. சசிகலாவின் பெற்றோர் இறந்து விட்டதால், பாட்டி லட்சுமி வளர்த்து வந்தார். இந்நிலையில், சசிகலாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி, அவரது பாட்டி லட்சுமியிடம் பெண் கேட்டார் குகன். திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் தர வேண்டாம் என குகன் கூறியுள்ளார். இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான மூன்று மாதத்தில், தனிக்குடித்தனம் செல்ல பணம் வாங்கி வருமாறு குகனும், அவரது தாயார் உமாவும்,54 கொடுமைபடுத்தினர். மனவேதனையடைந்த சசிகலா, 2019, செப்., 23ல் விஷம் குடித்து தற்கொலை செய்தார். கோவில்பாளையம் போலீசார் விசாரித்து, வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறை, மொத்தம்,2,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை