மேலும் செய்திகள்
பளு துாக்கும் போட்டியில் அசத்தும் உஷா
08-Dec-2025
கோவை: 43வது பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகள், கோவை நேரு விளையாட்டரங்கில் நடந்தது. இதில், டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். பாரதியார் பல்கலை அளவிலான தடகளப் போட்டிகளில், இக்கல்லுாரி மாணவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இந்த ஆண்டும், தங்கப் பதக்கங்களை ஐந்து பேர், வெள்ளிப் பதக்கங்களை நான்கு பேர் மற்றும் வெண்கலப் பதக்கங்களை எட்டு பேர் வென்று, கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டிகளில் இரண்டாமாண்டு வணிகவியல் மாணவர் அபிஷேக், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனையையும் படைத்தார். தொடர் ஓட்டப் போட்டிகளிலும் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தினர். மொத்தமாக இப்போட்டிகளில் மாணவர்கள், 17 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.
08-Dec-2025