உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாநகராட்சி சார்பில் இன்று குறைகேட்பு இல்லை

கோவை மாநகராட்சி சார்பில் இன்று குறைகேட்பு இல்லை

கோவை, ;வழக்கமாக, செவ்வாய்க்கிழமை தோறும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடத்துவது வழக்கம். சில சமயங்களில், நிர்வாக காரணங்களை கூறி, ரத்து செய்யப்படும்.ஒரு வாரத்துக்கு முன் நடந்த கூட்டத்துக்கு வந்த ஒருவர், அதிகாரிகளுடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் மீது நேருக்கு நேராக லஞ்ச குற்றச்சாட்டை சுமத்தினார். அது, சலசலப்பை ஏற்படுத்தியது.அதனால், கடந்த வாரம் நடந்த கூட்ட நடைமுறையை, அதிகாரிகள் மாற்றியமைத்தனர். கருத்தரங்கு அறைக்குள் அதிகாரிகள் அமர்ந்து கொண்டு, பொதுமக்களை ஒவ்வொருவராக வரவழைத்து மனுக்கள் பெற்றனர்.வழக்கம் போல், இன்று குறைதீர் கூட்டம் நடைபெறவிருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு வந்திருக்கும் சமயத்தில், ஏதேனும் சலசலப்பு ஏற்பட்டால், நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் என்கிற எண்ணத்தில், குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மக்களிடம் குறைகள் கேட்பதை தவிர, மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேறென்ன முக்கிய வேலைகள் இருக்கிறதென தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை