மேலும் செய்திகள்
கிரிக்கெட் லீக்: ஆதித் அணி வெற்றி
30-Oct-2024
கோவை; தபால் ஊழியர்களுக்கான 'போஸ்டல் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கிய நிலையில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த, 14 அணிகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.மேற்கு மண்டல தபால் துறை சார்பில் 'போஸ்டல் பிரீமியர் லீக்-2024' எனும் கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. இதில், 11 தபால் கோட்டங்கள் மற்றும் ஆர்.எம்.எஸ்., கோட்டம், எம்.எம்.எஸ்., பிரிவு, மண்டல அலுவலகம் என, 14 அணிகள் பங்கேற்றுள்ளன.கோவையில் தமிழ்நாடு வனக்கல்லுாரி மைதானத்தில், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி உட்பட ஏழு கோட்ட அணிகள் விளையாடுகின்றன. சமீபத்தில், மண்டல தபால் துறை தலைவர் சரவணன், இயக்குனர் அகில் ஆகியோர் கோப்பையை அறிமுகம் செய்து, போட்டி அட்டவணையை வெளியிட்டனர்.பணிச்சுமைகளுக்கு மத்தியில் தபால் ஊழியர்களுக்கு விளையாட்டு துறையிலும் உற்சாகப்படுத்தும் பொருட்டு 'நாக் அவுட்' முறையில் 'ரெட் டென்னிஸ்' பந்தில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்றைய முதல் போட்டியில், கோவை எம்.எம்.எஸ்., அணயினரும், திருப்பூர் தபால் கோட்ட அணியினரும் விளையாடினர்.முதலில் 'டாஸ்' வென்ற எம்.எம்.எஸ்., அணி பவுலிங் தேர்வு செய்தது. திருப்பூர் அணியினர், 10 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 88 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து, விளையாடிய எம்.எம்.எஸ்., அணியினர், 10 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 56 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவினர்.அதிகபட்சமாக, திருப்பூர் அணி வீரர் கார்த்திக், 26 பந்துகளில், 30 ரன்கள் எடுத்தார். வீரர் சந்தோஷ் இரு ஓவர்களில், 9 ரன்கள் கொடுத்து, இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டாம் ஆட்டத்தில், பொள்ளாச்சி அணியும், நீலகிரி அணியும்மோதின.'டாஸ்' வென்ற நீலகிரி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. எட்டு ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 25 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய பொள்ளாச்சி அணியினர் மூன்று ஓவர்களில், இரு விக்கெட் இழப்புக்கு, 26 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.பொள்ளாச்சி அணி வீரர் ஜெயக்குமார், 9 பந்துகளில், 16 ரன்கள் எடுத்தார். மேலும், இரு ஓவர்களுக்கு எட்டு ரன்கள் கொடுத்து, மூன்று விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து வரும், 24 மற்றும் டிச., 1ம் தேதிகளில் போட்டிகள் நடக்க உள்ளன.
30-Oct-2024