உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பனை விதை நடவு செய்த என்.எஸ்.எஸ் மாணவர்கள்

பனை விதை நடவு செய்த என்.எஸ்.எஸ் மாணவர்கள்

கோவில்பாளையம் : கோவில்பாளையம் அருகே, 160 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்ரஹார சாமக்குளம் உள்ளது. இக்குளத்தில், ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று, மரக்கன்றுகள் நடுதல், களை பறித்தல், நீர் பாய்ச்சுதல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட களப்பணி நடக்கிறது. 219வது வாரமான நேற்று சரவணம்பட்டி எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர், 60 பேர் களப்பணியில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டன. மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை