உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.டி.சி., தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு; மத்திய அமைச்சரை முற்றுகையிட முடிவு

என்.டி.சி., தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு; மத்திய அமைச்சரை முற்றுகையிட முடிவு

கோவை; என்.டி.சி., தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வுக்காணக்கோரி வரும், 30ம் தேதி கோவை வரும் மத்திய ஜவுளித்துறை அமைச்சரை முற்றுகையிட, முடிவு செய்யப்பட்டுள்ளது.என்.டி.சி., தமிழ்நாடு பஞ்சாலை தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம், காட்டூர் ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்தது.ஐ.என்.டி.யு.சி., தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடந்த கூட்டத்தில் எச்.எம்.எஸ்., ராஜாமணி, சி.ஐ.டி.யு., பத்மநாபன், ஏ.ஐ.டி.யு.சி., ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 'மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வந்த என்.டி.சி., பஞ்சாலைகள் கடந்த, 2020ம் ஆண்டு மே 18 முதல், இயக்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர் போராட்டத்தின் விளைவாக கடந்த, 2023ம் ஆண்டு ஜூன், 30ம் தேதி வரை, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.அதன் பின்னர் கடந்த, 2024ம் ஆண்டு அக்., 31ம் தேதி வரை பாதி சம்பளம் வழங்கப்பட்டும், நவ., 1 முதல் இதுவரை எவ்வித சம்பளமும் வழங்கப்படவில்லை. சட்டப்படி தரவேண்டிய, 8.33 சதவீதம் போனஸ் தொகையும் தீபாவளிக்கு வழங்கப்படவில்லை.இதனால், தொழிலாளர்கள் அடிப்படை வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, குடும்பத்துடன் பட்டினி கிடக்கும் சூழல் நிலவுகிறது. தொழிற்சங்கங்கள் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நெருக்கடியான இந்நிலைமைக்கு உடனடி தீர்வு காணக்கோரி வரும், 30ம் தேதி கோவை வரும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை, கருப்பு கொடியுடன் முற்றுகையிட, முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை