உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

வால்பாறை; வால்பாறையில், துவக்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, எளிய முறையில் பாடம் கற்பிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சியை, வட்டார கல்வி அலுவலர்கள் பன்னீர்செல்வம், ரகுபதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.திட்டமேற்பார்வையாளர் ராஜாராம் கூறுகையில்,''மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடர்ந்து இரண்டு நாட்கள் நடக்கிறது.துவக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், பாடல், கதை மற்றும் நடனம் வாயிலாக பாடம் கற்பிக்கும் விதம் குறித்தும், மாணவர்களுக்கு அடிப்படை திறன் குறித்தும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சியில், துவக்கப்பள்ளிகளை சேர்ந்த 72 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் செந்தில்குமார், பூங்கோதை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை