மாற்றுப்பாதை குறித்து ஆட்சேபனை தெரிவிக்கலாம்
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கவும், மாற்றுப்பாதை குறித்தும், நாளை மாலைக்குள் மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என, ஒன்றிய நிர்வாகம் அறிவித்துள்ளது. கிணத்துக்கடவில் இருந்து, அரசம்பாளையம் செல்லும் பிரதான ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் உள்ள ரயில்வே தடத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. எனவே, சுரங்கப்பாதை தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின், அதை எழுத்துப்பூர்வமாக, அரசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நாளை, 25ம் தேதி, மாலை 4:00 மணிக்குள் பொதுமக்கள் அளிக்க வேண்டும். மேலும், மாற்றுப்பாதைகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இருந்ததால் அதை குறிப்பிட்ட தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இத்தகவலை ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.