மேலும் செய்திகள்
நடுரோட்டில் பஸ் நிறுத்தம் போக்குவரத்து பாதிப்பு
18-Jan-2025
வால்பாறை; வால்பாறை, காந்திசிலை பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை நகரின் மத்தியில் மிகவும் குறுகாலான இடத்தில், காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து தான், அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.குறுகலான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால், பஸ்கள் நிறுத்த இடவசதி இல்லாமலும், பயணியர் நிற்க இடமில்லாமலும் தவிக்கின்றனர். இதனால், பெரும்பாலான பஸ்களில், ரோட்டிலேயே பயணியரை ஏற்றி, இறக்கி விடுகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.காந்தி சிலை வளாகத்தில் ஒரே ஒரு நிழற்கூரை மட்டுமே கட்டப்பட்டுள்ளதால், நிற்க இடமில்லாமல் பயணியர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ரோட்டில் பல மணி நேரம் காத்திருந்து பஸ்களில் செல்கின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:காந்தி சிலை பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. மேலும், ஆட்டோ, டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்ல முடியாமலும், பஸ்சை பின் நோக்கி திருப்ப முடியாமலும் நெருக்கடி ஏற்படுகிறது.பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காந்திசிலை பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி, கூடுதலாக பயணியர் நிழற்கூரை கட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போக்குவரத்து நெரிசலுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
18-Jan-2025