உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இடியாப்பம் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

 இடியாப்பம் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

கோவை: இடியாப்பம் உள்ளிட்ட பொருட்கள் மிதிவண்டி, இருசக்கர வாகனங்களில் விற்பனை செய்பவர்கள் உரிமம் வைத்திருப்பதை உறுதிசெய்வதுடன், தயாரிப்பு இடங்களையும் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இடியாப்பம் உள்ளிட்ட உணவு பொருட்களை இருசக்கர வாகனங்களில் வீடுதேடி காலை, மாலை நேரங்களில் வியாபாரிகள் விற்பனை செய்துவருகின்றனர். இதில், சிலர் போதுமான சுகாதார, பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து, இருசக்கர வாகனங்களில் விற்பனை செய்பவர்களும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு வைதிருக்கவேண்டியது கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், கண்காணிப்பு பணிகள் நேற்று துவக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, '' இடியாப்பம் இருசக்கர வானங்களில் விற்பனை செய்பவர்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. பதிவு வைத்துள்ளார்களா என்பதை கண்காணிக்கவும், இல்லை எனில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதை எடுக்க வழிகாட்டவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள், சாலையோர வியாபாரிகள் என்ற பிரிவின் கீழ் இருப்பார்கள் என்பதால், விண்ணப்ப கட்டணங்கள் ஏதும் இல்லை. தவிர, இடியாப்பம் தயாரிக்கும் இடம்வீடாக இருப்பினும், கடையாக இருப்பினும் அவ்விடங்களையும்ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை