உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலத்தில் கிடக்கும் எண்ணெய் குழாய்கள்; விவசாயிகள் புகார்

நிலத்தில் கிடக்கும் எண்ணெய் குழாய்கள்; விவசாயிகள் புகார்

சூலுார்; 'எண்ணெய் குழாய்கள் விவசாய நிலங்களில் கிடப்பதால், விவசாயம் செய்ய முடியவில்லை,' என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.பாரத் பெட்ரோலியத்தின் ஐ.டி.பி.எல்., திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் தேவன ஹந்தி வரை, 320 கி.மீ.,துாரத்துக்கு, குழாய் வழியாக பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், இருகூரில் இருந்து, திருப்பூர் மாவட்டம் முத்துார் வரை, 70 கி.மீ., துாரத்துக்கு, விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதற்கு, பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்புதெரிவித்து, இரு மாவட்டங்களிலும் போராடி வருகின்றனர். இதனால், பணி நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குழுவின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கணேசன், ரவிக்குமார், ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களில் குழாய்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், நாங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயம் செய்ய இடையூறாக உள்ள குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரமாக குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளோம்,''என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை