பழைய கார் உதிரிபாக குடோனில் தீ
கோவை: சிட்ராவை சேர்ந்த ரவி, 39 சின்னியம்பாளையத்தில் இருந்து இருகூர் செல்லும் ரோட்டில், ஸ்ரீ ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில், பழைய கார்களை வாங்கி உதிரிபாகங்களை பிரித்து விற்று வருகிறார். நேற்று (நவ.,24) நள்ளிரவு 12 மணிக்கு மேல் குடோனில் திடீரென தீப்பிடித்தது. பழைய கார்கள் சேதமடைந்தன. பீளமேடு தீயணைப்பு துறை வீரர்கள் அதிகாலை 4 மணி வரை போராடி தீயை அணைத்தனர். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.