மேலும் செய்திகள்
போன் பறிப்பு விடாமல் துரத்தி மீட்ட வாலிபர்
07-Oct-2025
தொண்டாமுத்தூர்: முதியவரிடம் மது குடிக்க பணம் கேட்டு, மண்டையை உடைத்த, இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பேரூரை சேர்ந்தவர் மோகன்தாஸ், 66. அதே பகுதியில் ஆயில் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று பகல், மோகன்தாஸ் பேரூர் அங்காளம்மன் கோவில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த வாலிபர்கள் இருவர், வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். மோகன்தாஸ் பணம் கொடுக்க மறுத்துள்ளார். வாலிபர்கள் செங்கல் எடுத்து, மோகன்தாஸின் தலையில் அடித்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதும், வாலிபர்கள் தப்பினர். காயமடைந்த மோகன்தா ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் அளித்த புகா ரின்பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேரூரை சேர்ந்த ராகுல், 21, சிவா,21 ஆகிய இருவரை கைது செய்தனர்.
07-Oct-2025