உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் த.மா.கா., வாசன் வரவேற்பு

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் த.மா.கா., வாசன் வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர் : ''ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறோம்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், நேற்று அவர் கூறியதாவது:

பெங்களூரு - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் நீட்டிப்பு என்பது அவசியம் மட்டுமல்ல, அவசர தேவை. இதை உணர்ந்து, தமிழக, கர்நாடகா மாநில அரசுகள் இணைந்து, விரைவில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.கர்நாடகா சட்டசபையில், காங்., தலைமையிலான அரசு, மேகதாது அணை கட்டுவதை உறுதியோடு வெளிப்படுத்தி உள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு மிகுந்த வேதனை, வருத்தத்தை அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, கர்நாடகா மாநில அரசிடம் கண்டிப்புடன் பேச வேண்டும். லோக்சபா தேர்தலில் த.மா.கா., கூட்டணி முடிவை விரைவில் அறிவிப்போம். மத்திய அரசு கொடுத்த நிதியை, தமிழக அரசு வெளிப்படை தன்மையோடு செயல்படுத்த வேண்டும்.ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை, த.மா.கா., ஆதரிக்கிறது. அதன் மூலம் பல லட்சம் செலவு மிச்சமாகும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sahayadhas
பிப் 18, 2024 13:28

என்னடா கூத்து


sahayadhas
பிப் 18, 2024 10:57

அபோ இவ்வளவு நாளும் வேற நாடா.


Ranganathan
பிப் 18, 2024 09:27

By supporting this One Nation one Election I believe the bogus voting by DMK will be minimized.


Ramesh Sargam
பிப் 18, 2024 09:16

ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டுமென்று அந்த காலத்திலேயே திமுக முன்னாள் தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி. ஆனால் அவர் வாரிசு, ஸ்டாலின், அப்பாவின் கருத்தையே எதிர்த்து நிற்கிறது.


Duruvesan
பிப் 18, 2024 07:49

வாசனுக்கு 500 ஓட்டு கிடைக்கும்


g.s,rajan
பிப் 18, 2024 07:21

ஒரே நாடு .ஒரே தேர்தல் .இரண்டு கட்சி முறை தான் இனி சரியானதாக இருக்கும்,எதற்கு நாட்டில் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேலான கட்சிகள் இருக்க வேண்டும் ...???


Bellie Nanja Gowder
பிப் 18, 2024 06:59

ஒரு நல்ல கருத்தை மக்கள் தலைவர் ஜி கே வாசன் அவர்கள் வெளிப்படையாக கூறி இருப்பதன் மூலம் பி ஜெ பி கூட்டணியில் தான் இணைவார் என்று நம்பலாம், இவரை போன்ற நல்லவர்கள் மோடியுடன் இருப்பது தமிழகத்திற்கு மிகவும் நல்லது.


குமரி குருவி
பிப் 18, 2024 06:32

ஒரே நாடு ஒரே தேர்தல்ஏன்..? என புரிந்துக்கொள்ளகொஞ்சம் தேச பற்று தேச நலன் எண்ணம் மனதில் இருக்கவேண்டும்..அது ஜி.கே.வாசனிடம் உள்ளது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை