உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் ஒருவர் காயம்

வாகன விபத்தில் ஒருவர் காயம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தாமரைக்குளம் அருகே பைக்கில் சென்ற நபர் மீது பஸ் மோதியதில் காயமடைந்தார்.கோவை, ஆலாந்துறையைச் சேர்ந்தவர் நசீர், 43, கூலி தொழிலாளி. இவர், பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், தாமரைக்குளம் பகுதியில் பைக்கில் சென்ற போது, முன்னாள் சென்ற அரசு பஸ் திடீரென நிறுத்தியதால், நசீர் ஓட்டி வந்த பைக் பஸ்சின் பின்பக்கம் மோதி விபத்து ஏற்பட்டது.அங்கு இருந்த மக்கள், நசீரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி